ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பாரிய போராட்டம்
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
திருகோணமலை - பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முத்துநகர் பிரதேசத்திலுள்ள 800 ஏக்கர் விவசாயநிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்பட்டு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளதை கண்டித்து முத்துநகர் விவசாயிகள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்னால் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸாருடன் வாக்குவாதம்..
இதன்போது, போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர் வசந்த முதலிகே பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில், "முத்துநகரில் 1972ஆம் ஆண்டு முதல் நாம் விவசாயம் செய்து வருகிறோம். 352 குடும்பங்கள் 5000 பேரின் வாழ்வாதாரம் இந்த நிலங்களிலேயே தங்கியுள்ளன.
நாங்கள் இது தொடர்பில் திருகோணமலையில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் சந்தித்து பிரச்சினை தொடர்பில் தெரிவித்தும் எவ்வித தீர்வும் கிட்டவில்லை" என குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 9 மணி நேரம் முன்

நேற்று முதல் மனைவியுடன் நிகழ்ச்சி, இன்று மாதம்பட்டி ரங்கராஜ் 2வது மனைவி செய்த வேலையை பாருங்களே... Cineulagam

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
