பிரித்தானியா செல்லவுள்ள இலங்கை ஜனாதிபதி - போராட்டத்திற்கு தயாராகும் புலம்பெயர் தமிழர்கள்
இந்த மாத இறுதியில் பிரித்தானியா செல்லவுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்க புலம்பெயர் தமிழர்கள் தயாராகி வருவதாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksha) இம்மாத இறுதியில் பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்து, கிளாஸ்கோ நகரில் இடம்பெறவுள்ள காலநிலை மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக அவரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படும் நிலையில், அவரின் விஜயத்திற்கு எதிராக எதிர்வரும் முதலாம் திகதி கிளாஸ்கோ நகரில் புலம்பெயர் தமிழர்களால் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தப் போராட்டங்களில் பங்கேற்குமாறு புலம்பெயர் தமிழர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு லண்டன் உட்பட பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து விசேட பேருந்துகளை இயக்க தமிழ் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri