யாழில் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு தீர்வு கோரி போராட்டம் (Video)
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று (31.03.2023) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்துக்கு முன்னால் இந்தப் போராட்டம் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சர்வதேசமே உரிய தீர்வு வழங்க வேண்டும்
இதன்போது, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே உரிய தீர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் போராட்டக்காரர்களால் எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கவனயீர்ப்பு போராட்டத்தின் போது, இறுதி யுத்தத்தின்போது குடும்பம் குடும்பமாக சரணடைந்தவர்கள் எங்கே என யாழ். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் உறவுகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
விசாரணை செய்த பின்னர் விடுதலை செய்வதாக கூறி இராணுவத்தினரால் அழைத்து செல்லப்பட்டவர்களின் நிலை தொடர்பில் பதில் வழங்க வேண்டும் என யாழ்.வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளைச்சேர்ந்த சிவபாதம் இளங்கோதை தெரிவித்தார்.
இலங்கையில் நீதி கிடைக்காத காரணத்தால் சர்வதேசத்திடம் சென்றதாகவும் சர்வதேசத்திடமிருந்தும் இதுவரை தமக்கான நீதி கிடைக்கவில்லை என்றும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
செய்தி-கஜிந்தன்




போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
