அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்து கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் (Video)
ஸ்ரீலங்கா டெலிகாம் நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு எதிராக அந்நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டிற்கு அதிக இலாபத்தை பெற்று தரும் இந்நிறுவனத்தை விற்பனை செய்வதன் மூலம் நாடு பெரும் நட்டத்தை அனுபவிப்பதுடன் பல ஊழியர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என ஸ்ரீலங்கா டெலிகாம் நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரணில் அரசாங்கம் மற்றும் வரவு-செலவு திட்டம் என்பவற்றிற்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.


ஸ்ரீலங்கா டெலிகாம் நிறுவனத்தை விற்பனை செய்யும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்றும் தமது கோரிக்கையை இந்த அரசாங்கம் நிறைவேற்றும் வரையில் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கோரிக்கைகள் நிறைவேற்றபடவில்லை என்றால் இன்று கொழும்பில் இடம்பெறும் போராட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.







அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 12 நிமிடங்கள் முன்
இலங்கை பாடகர் சபேசனுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயத்தை செய்த எஸ்.பி.சரண்... எமோஷ்னலான மேடை Cineulagam