சுகாதார தொழில் வல்லுனர்கள் சம்மேளனம் மட்டக்களப்பில் போராட்டத்தில் குதிப்பு (Video)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சுகாதார தொழில் வல்லுநர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்று பகல் 12 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தின் போது “பட்டதாரி உத்தியோகத்தர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்கு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கொடுப்பனவுகளை உடனடியாக வழங்கு, மேலதிக நேரத்திற்கு நியாயமான ஊதியத்தை வழங்கு, தகுதி உள்ளவர்களை தகுதியான இடங்களுக்கு நியமிக்க வேண்டும்” இவ்வாறான பதாதைகள் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
சுகாதார துறையின் தாதியர்கள், மருந்தக உதவியாளர்கள், மருந்தாளர்கள் இணைந்து சுகவீன விடுமுறைப்போராட்டத்தினை முன்னெடுத்துவரும் அதேநேரம் இன்றைய தினம் கவன ஈர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் காரணமாக வைத்தியசேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நோயாளர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |




நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening
லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை.. பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட் Cineulagam
ஈரான் போரில் அமெரிக்காவின் உண்மை நிலை... கசியவிட்ட அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை News Lankasri