ஆயிரக்கணக்கான மக்களால் மறிக்கப்பட்டது ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி! எரிபொருள் நிலையமும் முற்றுகை

Colombo Nuwara Eliya Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis
By Mayuri Jun 25, 2022 04:52 AM GMT
Report

வீதியை மறித்து போராட்டம்

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள மல்லிகைப்பூ இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலையம் ஒன்றில் நேற்று இரவு முதல் மண்ணெண்ணெய் எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் இன்று காலை ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ஹட்டன் - கொழும்பு, ஹட்டன் - நுவரெலியா, ஹட்டன் - கண்டி உள்ளிட்ட பிரதான வீதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக இரவு பகலாக சிறிய பிள்ளைகளின் கைக்குழந்தைகளையும் வைத்துக் கொண்டு மண்ணெண்ணெய்க்காக காத்திருக்கிறோம்.

நேற்றைய தினம் எங்களுக்கு முன்னுரிமை படிவங்களும் வழங்கப்பட்டன. அதிகாலை வேளையில் விளக்கங்களும் போடப்பட்டன. இப்போது மண்ணெண்ணெய் இல்லை என்கிறார்கள் நாங்கள் என்ன செய்வது வேலைவெட்டி இன்றி மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வதற்காக நாள் கணக்கில் காத்திருக்கிறோம்.

சரியான தீர்வில்லை

ஆனால் இதற்கு சரியான தீர்வினை எவரும் பெற்று கொடுப்பதில்லை. எங்களிடம் ஓட்டு வாங்கிய மலையக தலைவர்கள் இன்று மக்கள் படும் அவலங்களை கண்டுகொள்வதில்லை. ஒன்றுமே செய்ய முடியாவிட்டாலும் கூட மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படும் நாட்களையாவது அறிவித்தால் மக்கள் இந்த அளவு துன்பப்பட மாட்டார்கள்.

வாக்குகளை பெறும் போது மாத்திரம் உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நாங்கள் நாடாளுமன்றம் செல்கிறோம். உங்கள் உரிமைகள் சலுகைகள் அனைத்தையும் நியாயமான முறையில் பெற்றுக்கொடுப்போம் என்று தெரிவிக்கின்றார்கள்.

ஆனால் அவை வெறும் வாய் வார்த்தைகளாக மாத்திரமே உள்ளன. இப்போது மக்கள் படும் துன்பங்கள் துயரங்கள் கஷ்டங்கள் அவர்களின் கண்களுக்கு புலப்படவில்லையா? என கேள்வியெழுப்பியுள்ளனர். 

மேலதிக தகவல் - மலைவாஞ்சன்

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US