கொழும்பில் வீதிகளில் பொலிஸாரால் துரத்தப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்! வெலிக்கடை சிறைச்சாலை முன்பு ஒன்றுகூடியுள்ளதாக தகவல் (Video)

Colombo SL Protest
By Mayuri Nov 18, 2022 11:22 AM GMT
Report

கொழும்பில் இன்றைய தினம் போராட்டத்தில் இணைந்திருந்த அனைத்து போராட்டக்காரர்களுடம் பொரளை வழியாக சென்று வெலிக்கடை சிறைச்சாலை முன்பு ஒன்றுகூடியுள்ளனர். 

ஆறாம் இணைப்பு

கொழும்பில் ஐ.நா காரியாலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் போன்று கொழும்பின் பல பகுதிகளில் சிறு சிறு குழுக்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொழும்பு ஐ.நா காரியாலப் பகுதியிலிருந்து துரத்தப்பட்ட நிலையில் மீண்டும் அப்பகுதிக்கு வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் பொலிஸாரால் துரத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் போராட்டக்காரர்கள் மீது ஹோர்டன் பிளேஸ் பகுதியில் வைத்தும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போது போராட்டக்காரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொரளை பகுதியை நோக்கி செல்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

ஐந்தாம் இணைப்பு

கொழும்பில் பிரதமர் காரியாலயத்திற்கு முன்பிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றதையடுத்து விகாரமகாதேவி பூங்காவில் ஒன்றுகூடி அங்கு எதிர்ப்பினை தெரிவித்த பின்னர் மீண்டும் ஐ.நா காரியாலயத்தை நோக்கி வருகை தந்த வண்ணம் இருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் அப்பகுதியில் மீண்டும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. 

கொழும்பில் வீதிகளில் பொலிஸாரால் துரத்தப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்! வெலிக்கடை சிறைச்சாலை முன்பு ஒன்றுகூடியுள்ளதாக தகவல் (Video) | Protest At Colombo Today

நான்காம் இணைப்பு

கொழும்பு பௌத்தாலோக பகுதியில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமருடைய காரியாலயத்திற்கு முன்பாக வந்துள்ளனர்.

இதனையடுத்து பிரதமரின் காரியாலயத்திற்கு முன்பு நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் வண்ணம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 


மூன்றாம் இணைப்பு

கொழும்பு பௌத்தாலோக பகுதியில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமருடைய காரியாலயத்தை நோக்கி வருகை தந்த வண்ணம் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இரண்டாம் இணைப்பு

கொழும்பு பௌத்தாலோக பகுதியில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும் பகுதியில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.

ஆர்ப்பாட்டத்தினை தடுப்பதற்காக கலகத்தடுப்பு பிரிவினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள், ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்போரை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்நோக்கி நகர்ந்து வருகின்றனர். 

ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி வந்த பொலிஸார் பம்பலப்பிட்டி பகுதியில் நின்றுள்ளதையடுத்து அங்கிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் காலிமுகத்திடல் பகுதியை நோக்கி விரைந்துள்ளதாக தெரியவருகிறது. 

கொழும்பில் வீதிகளில் பொலிஸாரால் துரத்தப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்! வெலிக்கடை சிறைச்சாலை முன்பு ஒன்றுகூடியுள்ளதாக தகவல் (Video) | Protest At Colombo Today

முதலாம் இணைப்பு

கொழும்பு - பௌத்தாலோகமாவத்தையில் அமைந்துள்ள இலங்கைக்கான ஐ.நா காரியாலயத்திற்கு முன்பாக தற்போது போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோரின் விடுதலையை வலியுறுத்தியும், அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் உள்ளிட்ட பலர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


பொலிஸார் குவிப்பு

அப்பகுதியில் பெருந்திரளான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என பொலிஸார் அறிவுத்தியுள்ள போதும், அதனை மீறி போராட்டம் தொடர்ந்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இந்த நிலையில் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்திற்கு ஆயத்தம் செய்துள்ள நிலையில் அப்பகுதியில் பதற்ற நிலை நிலவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் போராட்டம் இடம்பெறும் பகுதியில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸாருடன் போராட்டக்காரர்கள் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு வருவதுடன், தமக்கு பொலிஸாரின் ஆதரவு தேவை எனவும் கோரி வருகின்றனர். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US