அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயம் முன்பாக அமைதிவழி போராட்டம் (Photos)
இலங்கையில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயம் மூடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதிவழி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் இலங்கையில் உள்ள ரோஹிங்கியா அகதிகளினால் இன்று (02.01.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணைய காரியாலயத்தின் முன்பாக பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நிறுத்தப்படும் கொடுப்பனவுகள்
இலங்கையில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணைய காரியாலயத்தை மூடுவதால், ரோஹிங்கியா அகதிகள் வேறொரு நாட்டிற்கு நிரந்தரமாக மீள்குடியேற்றம் செய்யப்படுவதோடு, உணவு, வீடுகள் போன்றவற்றுக்கான மாதாந்த கொடுப்பனவுகள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த செயற்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த அகதிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கருவை கலைக்க சொல்கிறார், இரண்டு முறை தாக்கினார்.. CWC நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி ஜாய் கிரிஸில்டா அதிர்ச்சி புகார் Cineulagam

இஸ்ரேலுக்கான வான்வெளியை மூடல்! அனைத்து வர்த்தகத்தையும் துண்டிக்க முடிவு..அறிவித்த துருக்கி News Lankasri
