தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் மீ்ண்டும் ஆரம்பம்..!
வலி வடக்கு, தையிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள சட்ட விரோத விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று (12) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தையிட்டி சட்டவிரோத விகாரையினை அகற்றக் கோரி இன்றைய தினம் காணி உரியாளர்கள் போராட்டத்தினை மீளவும் ஆரம்பித்துள்ளனர்.
அரசு நீதியினை வழங்க மறுத்து வருவதாக
தற்போதைய அரசு தொடர்ச்சியாக தமக்கான நீதியினை வழங்க மறுத்து வருவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இவ்விகாரையினை அகற்றி எமது காணிகளை விடுவிக்கும் வரை எமது போராட்டம் தொடர்ந்து செல்லும் எனவும் தங்களுடைய போராட்டம் இரண்டு வருடங்கள் கடந்தும் தமக்கான தீர்வு இன்னும் எட்டப்படவில்லை என தெரிவித்த போராட்டக்காரர்கள், எமது நிலத்தை மீட்கும் வரைக்கும் எமது போராட்டம் தொடர்ந்து செல்லும் என தெரிவித்துள்ளனர்.
குறித்த தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் இணைந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்றைய தினம் பூரணை நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri