ஒரு செழிப்பான தேசம் - ஒரு அழகான வாழ்க்கை: ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தல்
“ஒரு செழிப்பான தேசம் - ஒரு அழகான வாழ்க்கை" என்ற அரசாங்கத்தின் விஞ்ஞாபனத்தை அந்தந்த அமைச்சகங்கள், திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் செயற்படுத்துவதை கண்காணிக்குமாறு, அமைச்சக செயலாளர்களுக்கு ஜனாதிபதி செயலகம் கடிதம் எழுதியுள்ளது.
விஞ்ஞாபன செயற்பாடுகள்
குறித்த விஞ்ஞாபனத்தை அரசாங்கத்தின் தேசிய கொள்கை கட்டமைப்பாக ஏற்றுக்கொள்ளுமாறு அமைச்சரவை, அமைச்சக செயலாளர்களுக்கு கடந்த மார்ச் மாதத்தில் உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையிலேயே தற்போது அதன் செயற்பாடுகளை கண்காணிக்குமாறு ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அனைத்து அமைச்சக செயலாளர்களும் 2025 ஆம் ஆண்டுக்கான செயல் திட்டத்தை 2025 ஏப்ரல் 11 க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், 2025-2029 ஆம் ஆண்டுக்கான மூலோபாய திட்டத்தை, 2025 ஜூன் 30 க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan

தோட்டத்தில் புல் வெட்டியதற்காக வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி News Lankasri

2 முறை யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி.. முதலில் ஐபிஎஸ் ஆகி பின்னர் ஐஏஎஸ் அதிகாரியான நபர் யார்? News Lankasri
