மாவீரர் தின நினைவேந்தலுக்கு எதிராக அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தால் தடை உத்தரவு
அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி மற்றும் முன்னாள் விடுதலைப்புலிகளின் போராளி உட்பட 3 பேருக்கு எதிராக மாவீரர் தின நினைவேந்தலை எதிர்வரும் 27 ம் திகதிவரை செய்வதற்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்து கட்டளை ஒன்றை வழங்கியுள்ளது.
திருக்கோவில் பிரதேசத்திலுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி தம்பிராசா செல்வராணி, குட்டிமணி என்றழைக்ப்படும் முன்னாள் போராளி நாகமணி கிருஷ்ணபிள்ளை, நாகலிங்கம் சங்கரப்பிள்ளை, ஆகிய 3 பேர் தலைமையில் தடை செய்யப்பட்ட தமிழீழ் விடுதலைப் புலிகளின் அமைப்பில் மரணித்தவர்களுக்கு விளக்கேற்றி நினைவு கூர இருப்பதாக நம்பகரமான தகவலின் பிரகாரம் இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதுடன்,மீண்டும் தூண்டுகின்ற செயற்பாடு காணப்படுவதால் இந்த நினைவு கூரல் சம்பவம் நடைபெறாமல் தடை உத்தரவு ஒன்றை மேற்குறித்தவர்களுக்கும் அவர்கள் சார்ந்த உறுப்பினர்களுக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1979 ம் ஆண்டின் 15 ம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்ட கோவை (106)1, (106)2,
பிரிவின் கீழ் தடை உத்தரவு ஒன்றை கோரி திருக்கோவில் பொலிஸ் பொறுப்பதிகாரி
அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் சமர்பித்துள்ளார்.
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 17 மணி நேரம் முன்
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam