முல்லைத்தீவில் தொடரவுள்ள ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் பணிகள்
வவுனியா மற்றும் யாழ்பாணத்தினை தொடர்ந்து நாளை முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களின் கருத்துக்களை கேட்டறியும் பணிகள் தொடரவுள்ளதாக ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி அறிவித்துள்ளது.
ஒரே நாடு, ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் பணிகள் நேற்று வவுனியா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று யாழ்ப்பாணத்தில் இந்த பணிகள் இடம்பெற்றுள்ளது.
சட்டத்தரணிகள், தொழில் வல்லுநர்கள், மதத் தலைவர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்குச் சட்டத்தை சம அளவில் செயற்படுத்துவது தொடர்பில் அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் கருத்துக்களை கேட்டறிவது, இந்த ஜனாதிபதி செயலணியின் நோக்கமாக உள்ளது.
நாளை (22), முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களின் கருத்துக்களை கேட்டறியும் பணிகள் தொடரவுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் ஏனைய எட்டு மாகாணங்களிலும் உள்ள மக்களின் கருத்துக்களை கேட்டறிய எதிர்பார்த்துள்ளதாக செயலணி அறிவித்துள்ளது.