கோட்டாபயவின் ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற செயலணி கேலிக்கூத்தானது: எதிர் கட்சி சாடல்
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற செயலணி கேலிக்கூத்தான ஒரு செயலணி என்றே சொல்ல வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார்.
நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் (Gotabaya Rajapaksa) மற்றுமொரு ஜனாதிபதி செயலணி நிறுவப்பட்டுள்ளது. இந்த செயலணியின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் (Gnanasara Thera) நியமிக்கப்பட்டமை ஆணைக்குழுவின் நோக்கங்களை கேலிக்கூத்தாக்கும் செயலாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
எந்தவொரு குடிமகனும் இனம், மதம், சாதி அல்லது பிற காரணிகளின் அடிப்படையில் சட்டத்தில் எந்த மாற்றத்திற்கும் உட்படுத்தப்படக்கூடாது என்று ஆணைக்குழுவிற்கு ஒதுக்கப்பட்ட நடைமுறைக் கோவை கூறுகிறது.
கடந்த காலங்களில் ஞானசார தேரர் எவ்வாறு செயற்பட்டார் என்பதை இந்நாட்டு மக்கள் மறந்துவிடவில்லை.
முஸ்லிம்களை குறிவைத்து அவர் வெளியிட்ட அறிக்கைகளையும் செயற்பாடுகளையும் வைத்து நாட்டில் ஏற்படுத்திய நிலையை தர்கா நகரின் நிகழ்விலயே தெரிந்தது.
சட்ட மாற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஞானசார தேரர், சந்தியா எக்னலிகொடவிற்கு (Sandya Eknelygoda) நீதிமன்றத்திற்குள் கூறிய கருத்துக்கு, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சிறைவாச தன்டனைக்குட்பட்டு ஜனாதிபதி மன்னிப்பளிக்கப்பட்ட நபராவார்.
சட்டத்தின் ஆட்சியை அமுல்படுத்துவதற்கும் சட்டத்தின் பாதுகாப்பு நியாயமானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் நியமிக்கப்பட்ட செயலணிக்கு ஞானசார தேரரை நியமித்திருப்பது நாட்டின் அதியுயர் சட்டமான அரசியலமைப்பை அவமதிக்கும் செயலாகும்.
இந்த ஆணைக்குழுவின் நியமனத்தின் இரண்டாவது நகைச்சுவை என்னவென்றால், ஜனாதிபதி தனது பதவிக்காலம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கடந்து செல்லும் போது நடவடிக்கை எடுத்ததாகும்.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தில் முதல் வாக்குறுதியாக இருந்தது ஒரே நாடு,ஒரே சட்டம் என்பதே ஆகும்.
இருபதாம் திருத்தச் சட்டத்தின் மூலம் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தில் நுழைய அனுமதித்தது, தான் விரும்பும் நபர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவது, பாதிக்கப்பட்டவர்களை புறக்கணிக்கும் மோசமான அரசியல் பழிவாங்கல்களை ஆராய்வதற்காகவே என்று நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஊடாக நீதிமன்றங்களால் விதிக்கப்பட்ட தண்டனைகளை மாற்ற நடவடிக்கை எடுப்பது, அந்த ஆணைக்குழுவின் ஊடாக விசாரணை அதிகாரிகளை குற்றவாளியாக்கும் முயற்சியில், சட்டத்தின் ஆட்சியையே கேலிக்கூத்தாக்கிய, சட்டத்தின் ஆட்சிக்கே கூட சவாலாக விளங்கிய ஆட்சியாளர்கள், இப்போது தான் விழித்துக் கொண்டது போல, இந்த செயலணியை ஸ்தாபித்தது நாட்டையும் சர்வதேசத்தையும் ஏமாற்றுவதைத் தவிர வேறொன்றுக்குமில்லை.
இவ்வாறானதொரு செயலணிக்கு நாட்டின் இரண்டாவது பெரிய சனத்தொகையான தமிழ் மக்கள் மற்றும் பெண்களின் பிரதிநித்துவம் இல்லாமை என்பது பாரிய பிரச்சினையாகும்.
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் அரசாங்கம் வெட்கமில்லாமல் இருந்து வருகின்றது என்பது மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri