இலங்கைக்கு எரிபொருள் கப்பல் வருவதில் சிக்கல் - தொடரும் நெருக்கடி
இலங்கைக்கு எரிபொருளை திட்டமிட்ட வகையில் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 10ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் வழமையான முறையில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்ட போதும் அதற்கு சாத்தியமில்லை என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
எரிபொருள் கப்பல் வருவதில் தாமதம்
அடுத்த மாதம் 22ஆம் திகதியின் பின்னரே எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடையலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 11ஆம் திகதி வரை டீசல் இருக்காது என்றும், எதிர்வரும் 22ஆம் திகதி பெட்ரோல் இருக்கானதென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும், எதிர்வரும் நான்கு வாரங்களுக்குத் தேவையான ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு, ஜூலை மாதத்தில் வர வேண்டும் என்றார்.
சாகல வெளியிட்ட தகவல்
டீசலை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதத்தில் முதல் வாரத்தில் டீசல் கிடைக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல் ஏற்றுமதி தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சாகல மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam