தனியார் பேருந்து உரிமையாளர்களின் திடீர் அறிவிப்பு : பாதிப்புக்குள்ளாக போகும் பொதுமக்கள்
எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து தனியார் பேருந்துகளுக்கு புகைப் பரிசோதனை மேற்கொள்ளப் போவதில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் போக்குவரத்து அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இத் தகவலை தெரிவித்துள்ளார்.
எரிபொருளின் தரம்
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், தற்போது புகைப் பரிசோதனைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக எரிபொருளின் தரம் தொடர்பில் சிக்கல் உள்ளது. டீசலின் தரத்தில் கடும் சிக்கல் உள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கு புகைப் பரிசோதனை செய்யப்படுவதில்லை. அரசு வாகனங்களுக்கும் புகைப் பரிசோதனை இல்லை.
இந்நிலையில் தனியார் பேருந்துகளும் ஒரே சேவையை வழங்குகிறார்கள், ஒரே கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
எனவே, வரும் ஜனவரி மாதம் முதல் தனியார் பேருந்துகளும் புகைப் பரிசோதனையில் இருந்து நீக்குமாறு போக்குவரத்து அமைச்சகத்துக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்க உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

நீதிபதிக்காக நீதி கேட்கும் இந்த நாட்டில் சாதாரண மக்களுக்கு என்ன நீதியோ..! முல்லைத்தீவில் கண்டன போராட்டம் (Photos)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
