பொசன் போயா தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் கைதிகள் விடுதலை (Photos)
பொசன் போயா தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிறை கைதிகள், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வவுனியா
இதற்கமைய பொசன் போயா தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருந்து 5 கைதிகள் பொது மன்னிப்பில் இன்று (03.06.2023) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா சிறைச்சாலையில் இருந்து சிறு குற்றங்களை புரிந்த மற்றும் தண்டப்பணத்தினை செலுத்த முடியாத 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் முன்னிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சிறைக்கைதிகளை சந்திப்பதற்கும் அவர்களது உறவினர்களுக்கு விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை
பொசன் தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் திருகோணமலை சிறைச்சாலையில் இரண்டு சிறைக் கைதிகள் இன்று (3.06.2023) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிகழ்வு திருகோணமலை சிறைச்சாலை பிரதான பாதுகாவலர் ஆர்.மோகனராஜா தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது சிறுகுற்றங்கள் புரிந்த மற்றும் தண்டப்பணம் செலுத்த முடியாத சிறைக்கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் சிறை பாதுகாவலர் , புனர்வாழ்வு அதிகாரிகள், மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
செய்திகள் : பாரூக் முபாரக்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |