அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
மாகாண, வலய மற்றும் பிராந்திய கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி செயல்பட வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் நாளை (02) முதல் சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்பட்ட கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
கோவிட் பரவல் கட்டுப்பாட்டு நோக்கில், அரச பணியாளர்களை சுழற்சி முறையிலும், வரையறைக்கு உட்பட்ட அளவிலும் அழைத்து பணி செய்விக்கும் வகையில் விடுக்கப்பட்ட சுற்றுநிருபங்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேநேரம், சகல அரச பணியாளர்களையும் வழமை போன்று சேவைக்கு அழைப்பதற்கான சுற்று நிருபத்துக்கு அமைய, கல்விசார்ந்த துறையினரும் செயற்பட வேண்டும் என்று கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதுதொடர்பான கடிதங்களை உரிய தரப்புக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக அனைத்து மாகாண கல்வி திணைக்களங்கள், வலைய மற்றும் கோட்ட கல்வி அதிகாரிகளும் தங்களது பணிகளுக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.