மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் புதிய அதிபராக எம்.எஸ்.எம்.பைசால் (SLPS) நேற்று (28) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த 13ஆம் திகதி கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜி திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சையின் பெறுபேற்றின் படி எம்.எஸ்.எம்.பைசால் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமனக் கடிதம்
இதற்கான நியமன கடிதத்தினை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ் சஹுதுல் நஜீம் (SLEAS) வலயக்கல்வி பணிமனையில் வைத்து கையளித்திருந்தார்.
பாடசாலையின் பிரதி அதிபர் எம்.பி.ஏ றாஜி, பழைய மாணவர் சங்க பிரதி தலைவர் எம்.எஸ். உமர் அலி ஆகியோர் மாலையிட்டு புதிய அதிபரினை வரவேற்றனர்.
இவ்வைபவத்தில் புதிய அதிபரின் குடும்பத்தினர், ஷம்ஸ் மத்திய கல்லூரியின்
ஆசிரிய குழாம்,
ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவ சங்க செயலாளர் சுஹைல் ஜமால்தீன்,
பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் பி.எம். அறபாத், ஷம்ஸ் மத்திய கல்லூரியின்
பழைய மாணவ சங்க பிரதிநிதிகள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க
உறுப்பினர்கள், ஷம்ஸ் மத்திய கல்லூரி நலன் விரும்பிகள், அல் பஹ்ரியா
பாடசாலையின் புதிய அதிபர் எம். அப்துல் சலாம், அல் பஹ்ரியா பாடசாலையின் நலன்
விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.