பிரதமர் ரணில் எடுத்துள்ள முக்கிய முடிவு!
பிரதமர் ரணில் விக்ரசிங்க அலரி மாளிகையில் குடியேறுவதில்லை என தீர்மானித்துள்ளார். பிரதமரின் செயலகத்தின் செலவுகளை 50 வீதமாக குறைக்குமாறு பிரதமர் இதற்கு முன்னர் உத்தரவிட்டிருந்ததுடன் அந்த செலவு குறைப்பு தனக்கும் பொருந்தும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
தான் தனது தனிப்பட்ட சொந்த வீட்டில் குடியிருப்பதாகவும் கொழும்பு பிளவர் வீதியில் உள்ள பிரதமரின் செயலகத்தில் இருந்து கடமைகளை செய்யவும் முடிவு செய்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் போதும், ரணில் விக்ரமசிங்க, அலரி மாளிகையில் குடியிருக்கவில்லை எனவும் அரச பணிகளுக்காக மாத்திரம் அலரி மாளிகையை பயன்படுத்தி வந்தார் எனவும் பிரதமர் செயலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
இந்தியாவின் மூலோபாய நடவடிக்கை - வியட்நாம், இந்தோனேசியாவிற்கு பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி News Lankasri