அரச அதிகாரிகளுக்கு பிரதமர் விடுத்துள்ள கடுமையான உத்தரவு
சுற்றறிக்கைக்கு அமைவாக விவசாயிகளுக்கு அரச காணிகளை பயிர்ச்செய்கைக்காக வழங்குமாறு அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ள நிலையில், அரச அதிகாரிகள் அதில் தலையிட வேண்டாம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஹோமாகம, கந்தனாவத்தையில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி
“நாம் பொருளாதார ரீதியாக கடினமான காலங்களை எதிர்கொள்கிறோம்.அதை எதிர்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.அந்த வகையில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதே முதல் இலக்காகும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளின் திறன் மீது அரசு நம்பிக்கை கொண்டுள்ளது என்றும், இந்த ஊக்குவிக்க ஆதரிக்க அரசு கடமைப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இலங்கையில் கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில்களில் ஈடுபடுபவர்களை பலப்படுத்தவும் அரசாங்கம் செயற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள பிரச்சினையை முறியடிக்க வேண்டும் என்று கூறிய
பிரதமர், அனைத்து பொது அமைப்புகளும், சிவில் அமைப்புகளும், பெண்களும்
ஒன்றிணைந்தால் மட்டுமே இதில் வெற்றியடையலாம் என்று கூறியுள்ளார்.