கொள்கலன் வாகன போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பு- செய்திகளின் தொகுப்பு (Video)
கொள்கலன் வாகன போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை கொள்கலன் வாகன சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.
நேற்று (24) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கொள்கலன் வாகன போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த கொள்கலன் வாகன போக்குவரத்து கட்டணங்கள் 35 வீதத்தால் அதிகரிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஏப்ரல் 20 ஆம் திகதி, அகில இலங்கை கொள்கலன் பாரவூர்தி சங்கம் கொள்கலன் சரக்கு கட்டணத்தை 65% மாக அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,