இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு! சதொச நடவடிக்கை
நாடளாவிய ரீதியில் உள்ள சதொச கிளைகளில் இன்று முதல் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
ஹட்டன் சதொச கிளையில் கடந்த வாரம் 175 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பொன்னி சம்பா 200 ரூபாவுக்கும், 145 ரூபாவுக்கு விற்கப்பட்ட சிவப்பு நாட்டரிசி ஒரு கிலோ 175 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

பொருட்கள் விற்பனையை மட்டுப்படுத்தும் சதொச
170 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சீனி 177 ரூபாவாகவும், 489 ரூபாவாக விற்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு பருப்பு கிலோ 560 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
விலைவாசி உயர்ந்தாலும், சில உணவுப் பொருட்கள் குறைந்த அளவிலேயே உள்ளதுடன் அரிசி சீனி போன்ற அத்தியாவசிய பொருட்களின் விற்பனைத் தொகையை சதொச நிர்வாகம் மட்டுப்படுத்திய அளவில் விற்பனை செய்து வருகிறது.
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri