ஜனாதிபதி சிறைக்கு செல்ல ஆயத்தமாக இருக்க வேண்டும்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சிறைக்குச் செல்ல ஆயத்தமாக இருக்க வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
திருட்டை மேற்கொண்டு, திருட்டை விசாரணை செய்வதாக கூறி உண்மையான திருடனை காப்பாற்றி வேறு ஒருவரை பலிக்கடாவாகும் நிலைமையை அவதானிக்க முடிகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலக்கரி இறக்குமதி மோசடி விவகாரம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

அமைச்சரை பாதுகாத்து அமைச்சின் செயலாளரை சிக்க வைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
களவாடியதுடன் களவாடிய நபரை பாதுகாத்து வேறு ஒருவரை பலிக்கடாவாக்கும் நிலைமை வரலாற்றில் இதற்கு முதல் நாம் பார்க்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த ஆணைக்குழு நிறுவுதல் போன்ற நகைச்சுவை விடயங்கள் ஊடாக இந்த நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய அழுத்தங்களையும் வேதனைகளையும் தீர்க்க முடியாது என்பதை ஜனாதிபதி புரிந்து கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்த குற்றச்செயல் தொடர்பில் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட சிலரை பலிக்கடாவாக்கி இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்து வரும் அரசாங்கத்தின் கீழ் இந்த மோசடி தொடர்பில் சரியான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த அரசாங்கத்தின் விசாரணையில் ஜனாதிபதிக்கும் அமைச்சருக்கும் சிறையில் தண்டனை அனுபவிக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இந்த மோசடி தொடர்பில் சிறைக்கு செல்ல ஆயத்தமாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மோசடியுடன் ஜனாதிபதிக்கு எவ்வாறு தொடர்பு உண்டு என்ற விடயங்கள் எதிர்வரும் நாட்களில் வெளிப்படுத்தப்படும் என விமல் வீரவன்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.
புடினுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு அச்சம் தீவிரம்: ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினர் சதித்திட்டம் News Lankasri
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri