அரசாங்கத்தின் ஆயுட் காலம் மூன்று மாதங்களே : திஸ்ஸ அத்தநாயக்க சாடல்
இந்த அரசாங்கத்தின் ஆயுட்காலம் வெறும் மூன்று மாதங்களே என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறையை மாற்ற வேண்டுமென நீதி அமைச்சர் அடிக்கடி கூறி வருகின்ற போதிலும், இதனை ஐக்கிய மக்கள் மக்கள் சக்தி வலுவாக எதிர்ககின்றது என தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நாட்டில் தேர்தல் முறைமை மாற்றம் அவசியமில்லை எனவும் தேர்தல் ஒன்றே தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் மூன்று மாதங்களில் கட்டாயமாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தேர்தலை ஒத்தி வைக்க முயற்சிக்கின்றது
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இந்த அரசாங்கம் முடிவுக்கு வந்துவிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, மக்கள் ஆணையை பெற்றுக்கொண்டு ஆட்சி பீடம் ஏறும் புதிய அரசாங்கமொன்றே தேர்தல் முறை மாற்றம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
மூன்று மாதங்கள் ஆட்சியில் நீடிக்கப் போகும் இந்த அரசாங்கம் எவ்வாறு தேர்தல் முறையை மாற்றியமைக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ள அவர் தேர்தல் முறை மாற்றம் என்ற போர்வையில் அரசாங்கம் பொதுத் தேர்தலை ஒத்தி வைக்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |