தனியார் துறை ஊழியர்களுக்கான விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்திய தேர்தல்கள் ஆணைக்குழு, அனைத்து ஊழியர்களுக்கும் வாக்களிக்க விடுமுறை வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தனியார் துறை ஊழியர்களுக்கும் கீழ்க்கண்டவாறு தூரத்திற்கு ஏற்ப விடுமுறை அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 40 கிலோமீற்றர் அல்லது அதற்கு குறைவாக இருந்தால் அரை நாள் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்று நாள் விடுமுறை
40 தொடக்கம் 100 கிலோமீற்றர் வரை இருந்தால் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இதேவேளை 100 – 150 கிலோமீற்றர் தூரம் என்றால் ஒன்றரை நாள் விடுமுறையும் 150 கிலோமீற்றருக்கு மேல் இருந்தால் இரண்டு நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படவுள்ளது.
மேலும், பணியிடத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ள சில வாக்காளர்களுக்கு வாக்களிக்க மூன்று நாட்கள் தேவைப்பட்டால் அதற்குத் தேவையான மூன்று நாள் விடுமுறையையும் அந்த நிறுவனங்கள் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

இதய திருடன் படத்தில் நடித்த இந்த நடிகையை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
