மொட்டுக்கட்சியின் ஆதரவு ரணிலுக்கே: திலும் அமுனுகம
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி அவரையே ஆதரிக்கும் என ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளினால் ஜனாதிபதியாக தெரிவாகியவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி அதிகாரபூர்வ தீர்மானம்
எனவே அவருக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்பது பிரச்சினையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நாடு தற்பொழுது வழமைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகவும், இதன் கௌரவம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கே சென்றடைய வேண்டுமென திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி இன்னமும் அதிகாரபூர்வ தீர்மானம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
