தனியாரிடம் மின்சாரம் கொள்வனவு செய்யுமாறு அழுத்தம்! - அமைச்சர் வெளியிட்ட தகவல்
தனியார் துறையினரிடம் கூடுதல் விலை கொடுத்து மின்சாரத்தை கொள்வனவு செய்யுமாறு சில தரப்பினர், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக அமைச்சர் காமினி லொகுகே குற்றம் சுமத்தியுள்ளார்.
தனியார் துறையினருடன் ஒப்பந்தம் கைச்சாத்திடுமாறு இந்த தரப்பினர் அரசாங்கத்தை வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் மாற்று வழிகளை பின்பற்றவில்லை என சில மின் பொறியியலாளர்கள் குற்றம் சுமத்துவதற்கான பின்னணி இதுவேயாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
வரட்சி நீடிக்கும் போது இவ்வாறு தனியார் துறையினரிடமிருந்து மின்சாரத்தை பெற்றுக்கொள்ள நேரிடும் எனவும், ஏப்ரல் மாதமளவில் இவ்வாறு மின்சாரம் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்த செலவில் தனியார் துறையினரிடம் மின்சாரம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் துறையினரிடம் மின்சாரம் பெற்றுக்கொள்ளும் உடன்படிக்கைகள் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri