யாழ். பாடசாலை மாணவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல் (Photos)
யாழ். மாவட்ட மாணவர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளார்.
கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Skills Expo 2023 என்னும் நிகழ்வு கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் இன்று (12.05.2023) ஆரம்பமாகியுள்ளது.

யாழ். பாடசாலை மாணவர்கள்
இக்கண்காட்சியில் பங்கெடுக்க நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் ஒருங்கமைப்பில் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 750 மாணவர்கள் வருகைதந்துள்ளனர்.
நிகழ்வில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ். மாவட்ட மாணவர்களை சந்தித்து உரையாடியுள்ளார்.
இதன்போது, எதிர்கால கல்வி முன்னேற்றத்தில் யாழ். மாவட்டத்தின் பங்களிப்பு நாட்டுக்கு அவசியம் என்றும், தொழிற்கல்வியில் அதிகம் ஈடுபாடு காட்டுமாறும் ஜனாதிபதி மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW |
மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! 12 மணி நேரம் முன்
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan