தனியார் துறை முதலீட்டாளர்களுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்
அனர்த்த நிலைமைக்குப் பிறகு சேதமடைந்த நெடுஞ்சாலைகள் மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்புகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்து தனியார் துறை முதலீட்டாளர்களுடன் ஜனாதிபதி அறுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி அலுலகத்தில் கலந்துரையாடினார்.
இந்த உட்கட்டமைப்பு வசதிகளை மீள கட்டியெழுப்பும் நோக்கத்தில் வலுவான நிதியம் ஒன்றை நிறுவுதல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அனர்த்த நிலைமை காரணமாக, மேலோட்டமாகத் தெரிவதை விட நாடு பெரும் அழிவைச் சந்தித்துள்ளது என்றும், அந்த நிலையிலிருந்து மீள்வதற்கு,அரச மற்றும் தனியார் துறைகளை ஒருங்கிணைக்கும் ஒரு மத்தியதர மற்றும் நீண்டகால வேலைத்திட்டத்தை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நிறுவப்படும் இந்த நிதியத்தை முகாமைத்துவம் செய்ய அமைச்சரவை அங்கீகாரத்துடன் கூடிய அரச மற்றும் தனியார் துறைகளைக் கொண்ட கூட்டு முகாமைத்துவக் குழுவை நியமிக்க எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன், இந்த முயற்சிகளை வெற்றிபெறச் செய்ய கைகோர்க்குமாறும் முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam
சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காத பிரித்தானிய அரசு: அறிமுகமாகும் புதிய புலம்பெயர்தல் விதி News Lankasri