ஒலுவில் துறைமுக நிர்மாணம் கடலரிப்பை ஏற்படுத்துமா..! ஜனாதிபதி பேசியதற்கு பதிலடிக் கொடுத்த இம்ரான் எம்.பி

Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Sri Lanka Government Imran Maharoof
By H. A. Roshan May 30, 2026 11:53 AM GMT
Report

ஒலுவில் துறைமுகம் நிர்மாணம் விஞ்ஞான ரீதியாகப் பரிசீலிக்கப்பட்டது அல்ல என்றும் அதனால் கடலரிப்பு ஏற்படுவதாகவும் பேசிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஏன் கொழும்பு போர்ட்சிட்டடி நிர்மாணத்தினால் ஏற்பட்ட கடலரிப்பு குறித்து பேசவில்லை என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கேள்வியெழுப்பியுள்ளார்.

கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இன்று(30.05.2026) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வேகமாக வலுவடைந்து வருகின்றது! சதுரங்க அபேசிங்க

பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வேகமாக வலுவடைந்து வருகின்றது! சதுரங்க அபேசிங்க

ஒலுவில் துறைமுகம் நிர்மாணம்

அவர் மேலும் கூறியதாவது,

அண்மையில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி ஒலுவில் துறைமுக நிர்மாணம் குறித்து கருத்து தெரிவிக்கையில், அது விஞ்ஞான ரீதியான சாத்தியக் கூற்று அறிக்கை பெறப்படாது அரசியல் நோக்கத்திற்காக நிர்மாணிக்கப்பட்டது என்றும் அதனால் தான் கடலரிப்பு ஏற்படுவதாகவும் கூறினார். இவரின் இந்தக் கருத்து அரசியல் நோக்கம் கொண்டது.

ஒலுவில் துறைமுக நிர்மாணம் கடலரிப்பை ஏற்படுத்துமா..! ஜனாதிபதி பேசியதற்கு பதிலடிக் கொடுத்த இம்ரான் எம்.பி | President Speaks On Oluvil Port Construction

மறைமுகமாக முன்னாள் அமைச்சர் மர் ஹூம் அஷ்ரப் குறைக்கூறும் நோக்கம் கொண்டது. உண்மையில் இந்தத்துறைமுகம் ஆய்வுகள் எதுவுமின்றி நிர்மாணிக்கப்பட்டது என்றால் கடந்த 2 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் அவர் ஏன் இது குறித்து இதுவரை மாற்று நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை அல்லது இது குறித்து ஏன் முன்னர் கருத்து ஏதும் தெரிவிக்க வில்லை என்று கேட்க விரும்புகிறேன்.

குறைக் கூறுவதே ஜனாதிபதியின் நோக்கம்

அம்பாறை மாவட்டத்திற்கு வந்து தானா இந்தக் கருத்தை அவர் சொல்ல வேண்டும். அவர் இந்தக் கருத்தை இப்போது சொல்வதற்கு காரணம் அம்பாறை மாவட்ட மக்களின் மனங்களில் வாழும் மறைந்த அஷ்ரஃப் குறித்து குறைச் சொல்ல வேண்டும் என்ற நோக்கமே தவிர வேறில்லை.

கொழும்பு போர்ட் சிட்டி நிர்மாணமும் எந்தவித சுற்றாடல் ஆய்வுகளுமின்றி ஆரம்பிக்கப்பட்டது தான். இதனால் உஸ்வெட்டக் கெய்யாவ, வென்னப்புவ, நீர்கொழும்பு போன்ற பகுதிகள் அரிக்கப்படவதாக சூழலியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஒலுவில் துறைமுக நிர்மாணம் கடலரிப்பை ஏற்படுத்துமா..! ஜனாதிபதி பேசியதற்கு பதிலடிக் கொடுத்த இம்ரான் எம்.பி | President Speaks On Oluvil Port Construction

கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதாகவும், கடலின் அடியில் உள்ள வளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து ஜனாதிபதி எங்காவது பேசியுள்ளாரா?

ஜனாதிபதியின் ஆட்சியில் கிழக்குக்கு ஒரு சட்டம் மேற்கிற்கு ஒரு சட்டமா? இவ்வளவு பாதிப்புகள் போர்ட் சிட்டியினால் ஏற்பட்டும் கூட அதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளையும் தேவையன ஏனைய சகல ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்து வருகின்றது.

எனவே, ஜனாதிபதி ஒலுவில் துறைமுகம் குறித்து தெரிவித்த கருத்து மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களை குறை சொல்லும் நோக்கம் கொண்டதே தவிர வேறு இல்லை என்பது தெளிவாகின்றது.

நாட்டில் சுமார் 100 பகுதிகளில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டு.. சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

நாட்டில் சுமார் 100 பகுதிகளில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டு.. சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை வர்த்தகர்கள் உட்பட பலர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை வர்த்தகர்கள் உட்பட பலர் கைது!



மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US