வெளிநாட்டு பயணங்களுக்காக அதிக நிதியை செலவிட்ட ஜனாதிபதி ஒருவரின் விபரம் வெளியானது
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்கான மொத்த செலவினங்களை, இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya), வெளியிட்டுள்ளார்.
இந்த விபரங்கள், பல ஆண்டுகளாக ஜனாதிபதிகளின் பயணங்களால் அரசுக்கு ஏற்பட்ட நிதிச் செலவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.
பயணச் செலவு
ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணச் செலவுகளின் விபரங்களை அவர் பட்டியலிட்டார்.
இதன்படி, மகிந்த ராஜபக்ச (2010–2014): 3,572 மில்லியன் ரூபாய்
மைத்ரிபால சிறிசேன (2015–2019): 384 மில்லியன் ரூபாய்
கோட்டாபய ராஜபக்ச (2020–2022): 126 மில்லியன் ரூபாய்
ரணில் விக்ரமசிங்க (2023–2024): 533 மில்லியன் ரூபாய்
அநுர குமார திசாநாயக்க (செப்டம்பர் 2024–பெப்ரவரி 2025): 1.8 மில்லியன் ரூபாய் என்ற அளவில் செலவிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசுக்கு இழப்பு
குறித்த விபரங்களின்படி, 2010 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் அதிகபட்ச செலவு 2013 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அப்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வெளிநாட்டுப் பயணங்களால், இலங்கை அரசுக்கு 1,144 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் எடுத்துரைத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |