ஜனாதிபதியின் நடவடிக்கை அனைத்தும் குப்பை தொட்டியில்! தேரர் வெளியிட்ட தகவல்
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நிரந்தர நியமனம் தொடர்பாக ஜனாதிபதி,பிரதமர் ,அமைச்சர் மற்றும் அரசியல்வாதிகள் பொய்யான தகவல்களையே வழங்கிக் கொண்டு வருவதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலைய ஏற்பாட்டாளர் தென்னனே ஜான ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று மட்டு.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பான ஒரு தீர்மானத்தை அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்க வேண்டும். இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது ஜனாதிபதியின் தலைமையில் அடங்கியுள்ளது. பல மேடைகளில் பட்டதாரிகள் தொடர்பாக பல வேலை திட்டங்களை அவர் முன்வைத்திருந்தார்.
முன்வைத்த வேலைத்திட்டங்கள் அனைத்துமே இடையில் நிறுத்தப்பட்டு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வீதியில் நிற்கின்ற நிலைமை காணப்படுகின்றது.
5 பயிற்சிகளைச் செய்து அவர்களுக்கான நியமனங்களை வழங்குவதாக கூறி இருந்தார் அதையும் தற்போது இடைநிறுத்தியுள்ளார். ஆகவே நாங்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகின்றோம் எங்களது நிரந்தர நியமனம் தொடர்பாக தீர்க்கமான முடிவு ஒன்றை வழங்க வேண்டும்.வழங்காத பட்சத்தில் நாங்கள் வீதியில் இறங்கி போராட நேரிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேற்கொள்ளும் நடவடிக்கை அனைத்தும் குப்பைத் தொட்டியில் போடப்படுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri
வெனிசுலாவின் எண்ணெய் டேங்கரை அமெரிக்கா கைப்பற்றிய பரபரப்பு காட்சிகள்! டிரம்ப் சொன்ன தகவல் News Lankasri