பொய் பேசுகிறார் ஜனாதிபதி ரணில்! சுமந்திரனின் டுவிட்டர் பதிவு
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியைத் தெரிவுக்கான வாக்களிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள கருத்து பொய்யானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைக் கடந்த வாரம் நேரில் சந்தித்தபோது, அவர்களில் சிலர் தன்னை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய வாக்களித்துள்ளனர் என்று கூறியிருந்தார்.
பொய் கூறிய ரணில்..
இது தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுமந்திரன் எம்.பி., அது பொய்யான கூற்று என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி பொய் பேசுகின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற வகையில் நாங்கள் ஏகமனதாக டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்கத் தீர்மானித்தோம்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தை கூட்டத்தில் எந்தக் கட்டத்திலும் ஒருவர் கூட கூறியிருக்கவில்லை என்று சுமந்திரன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
The President is lying. Not only was the decision by @TNAmediaoffice to vote for @DullasOfficial made unanimously, at no stage of the meeting did even one person express the view that we must vote for @RW_UNP https://t.co/ZMsDf1g1jO
— M A Sumanthiran (@MASumanthiran) August 7, 2022