நாட்டில் ஜனாதிபதி இருக்கின்றார் மக்களுக்கு தென்படுவதில்லை: எரிமலைக்கு மேல் இருந்துக்கொண்டு டெனிஸ் பந்து விளையாடுகிறோம்:வீரவங்ச

Parliament of Sri Lanka Wimal Weerawansa Sri Lanka Economic Crisis Sri Lanka Fuel Crisis
By Steephen Jul 04, 2022 09:35 AM GMT
Report

நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அந்த சிக்கலை தீர்க்கும் முறை சம்பந்தமாக மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி தெளிவுப்படுத்துவதற்கு ஜனாதிபதியோ பிரதமரோ நாடாளுமன்றத்தில் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும் விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர இதனை கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் மீது சர்வதேசத்திற்கு எந்த நம்பிக்கையும் இல்லை

நாட்டில் ஜனாதிபதி இருக்கின்றார் மக்களுக்கு தென்படுவதில்லை: எரிமலைக்கு மேல் இருந்துக்கொண்டு டெனிஸ் பந்து விளையாடுகிறோம்:வீரவங்ச | President In Country But Not Appear Public

நாட்டில் இருக்கும் அரசாங்கம் தொடர்பில் சர்வதேசத்திற்குள் எவ்வித நம்பிக்கையும் இல்லை. நாடாளுமன்றத்தில் நாம் தற்போது கூடி இருப்பது வழமையான நிலைமையில் அல்ல.

நாட்டில் எரிபொருள் இன்றி சுயமான ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலைமையில் நாடு இருக்கின்றது. இந்திய எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் கிலோ மீற்றர் கணக்கில் வாகனங்கள் வரிசையில் நிறுத்தப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்களும் பயணம் ஒன்றை மேற்கொண்டால் எப்படி திரும்ப வருவது என்ற அச்சத்தில் உள்ளனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் இந்த நாடாளுமன்ற கூட்டம் நடக்கும் அவையில் பிரதமர் இல்லை.

எரிசக்தி அமைச்சர் இல்லை. நாங்கள் முன்பு கேட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதை விட மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமைக்கு பதிலளிப்பது யார். நாட்டில் ஜனாதிபதி இருக்கின்றார் மக்களுக்கு அவர் தென்படுவதில்லை.

மக்கள் மிக மோசமான கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ளனர். மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் எதுவும் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இல்லை. நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கின்றோம் என்பதற்காக இந்த பிரச்சினையில் குறித்து மகிழ்ச்சியடைய மாட்டோம்.

கஷ்டத்தில் இருந்து மக்கள் மேழேந்து வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க நாங்களும் எந்த நாட்டுடன் பேசலாம் என்று தனியாகவும் முயற்சித்து வருகின்றோம்.

நாடு எரிமலைக்கு மேல் இருக்கின்றது

நாட்டில் ஜனாதிபதி இருக்கின்றார் மக்களுக்கு தென்படுவதில்லை: எரிமலைக்கு மேல் இருந்துக்கொண்டு டெனிஸ் பந்து விளையாடுகிறோம்:வீரவங்ச | President In Country But Not Appear Public

நாட்டின் பிரச்சினை மேலும் உக்கிரமடைய இடமளிக்காது அனைத்து கட்சிகளும் இணைந்து சர்வக்கட்சி அசாங்கத்தை அமைக்க வேண்டும்.

சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைத்து நாட்டிலும் சர்வதேசத்திலும் நம்பிக்கை ஏற்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு செல்வோம். அதனை விடுத்து நாங்கள் முன்பு கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துக்கொண்டு என்ன செய்துக்கொண்டிருக்கின்றீர்கள்.

நாம் விளையாட்டிக்கொண்டிருக்கிறோமா, நாடு எரிமாலைக்கு மேல் இருக்கின்றது. எரிமலைக்கு மேல் இருந்துக்கொண்டு நாம் டெனிஸ் பந்து விளையாடிக்கொண்டிருக்கின்றோம் எனவும் விமல் வீரவங்ச கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US