உதயங்கவுக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் தொடர்பில்லை : மகிந்த தரப்பின் அறிவிப்பு
ரஸ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கும் பொதுஜன பெரமுனக் கட்சிக்கும் தொடர்பில்லை என்று கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்(Sagara Kariyavasam) தெரிவித்துள்ளார்
எனவே கட்சி தொடர்பில் அவர் வெளியிடும் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவேண்டிய அவசியம் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமராக நாமல்...
பொதுஜன பெரமுன தனது ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவையும்(Dammika Perera) பிரதமராக நாமல் ராஜபக்சவையும்(Namal Rajapaksha) நியமிக்கும் என உதயங்க வீரதுங்க(Udayanga Weeratunga) தெரிவித்திருந்தமை தொடர்பில் காரியவசத்திடம், ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்கும் என மீண்டும் வலியுறுத்திய சாகர காரியவசம், வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி பொதுஜன பெரமுனவில் இணைந்தால் அவருக்கு ஆதரவளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri