எதிர்க்கட்சிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ஜனாதிபதி அநுர
உள்ளுராட்சி மன்றங்களில் மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக செயற்படும் எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் அளித்த ஆணையை திருட முயற்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் 60வது ஆண்டு விழாவில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி எச்சரிக்கை
நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் செயற்படுகிறது. மக்கள் விருப்பத்திற்கு மாறாக செயற்படும் எந்தவொரு முயற்சியும் கடுமையான விளைவுகளை சந்திக்கும் என ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி 267 உள்ளூராட்சி மன்றங்களை நிர்வகிக்கும் ஆணையை பெற்றுள்ளது. முதல் நாளில் 152 மன்றங்களிலும், மீதமுள்ள 115 மன்றங்களிலும் விரைவில் அதிகாரத்தை ஏற்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.
மக்கள் ஆணை
உள்ளுராட்சி சபைகளில் எதிர்க்கட்சிக்கு ஆட்சி செய்யும் ஆணை இல்லை எனவும், சில கட்சிகள் ஒரு மன்றத்தில் ஒரு அல்லது இரண்டு உறுப்பினர்களை மட்டுமே பெற்றுள்ளன எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மக்கள் ஆணைக்கு எதிராக உருவாக்கப்படும் எந்தவொரு உள்ளுராட்சி மன்றமும் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு மேல் நீடிக்காது எனவும் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

Veera Ep - 332: வள்ளியம்மாவிற்கு எதிராக வீரா எடுக்கும் முடிவு...வில்லதனத்தை ஆரம்பிக்கும் விஜி Manithan

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
