கிளிநொச்சிப் பகுதி கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசாக்குணவு பொருட்கள் வழங்கி வைப்பு
கிளிநொச்சி (Kilinochchi) - கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் போசாக்கு குறைபாடான கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான போசாக்கு உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த வேலைத்திட்டமானது, இன்று (17.05.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கரைச்சி பிரதேச சபையினால் குழந்தைகள் சிறுவர்களுடைய போசாக்கினை கருத்திற்கொண்டு சத்துணவு பொருட்களை வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விசேட வேலைத்திட்டம்
அந்தவகையில், இந்த ஆண்டுக்கான சத்துணவு பொதிகள் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கண்டாவளை - கண்டாபாளை பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 20 கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான போசாக்கு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன்போது, கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் மற்றும் கண்டாவளை பதில் சுகாதார வைத்திய அதிகாரி, பிரதேச சபையின் பதவி நிலை உத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |