தாய்லாந்து பிரதமர் பிரயுத் பதவியிலிருந்து இடைநீக்கம்

Prayuth Chan-Ocha Thailand
By Jenitha Aug 24, 2022 08:36 AM GMT
Report

தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ சாவை அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் பதவியிலிருந்து இடை நீக்கம் செய்துள்ளது.

பதவிக்கால வரம்பின் சட்டப்பூர்வ மறு ஆய்வு முடிவு வரை, அவர் உத்தியோகபூர்வ பணியிலிருந்து நீதிமன்றினால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ச்சியாக பதவியில் இருந்தமை 

தாய்லாந்தின் அரசியலமைப்பு பிரதம மந்திரிகளின் பதவியில் எட்டு ஆண்டுகள் மட்டுமே இருக்க வேண்டும்.

பிரயுத் சான்-ஓச்சா 2014 இல் இராணுவப் புரட்சியில் அதிகாரத்தைக் கைப்பற்றி, மேலும் 2019 இல் இராணுவ அரசாங்கத்தின் வழிகாட்டுதலின் கீழ் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார்.

வெடித்த போராட்டங்கள்

தாய்லாந்து பிரதமர் பிரயுத் பதவியிலிருந்து இடைநீக்கம் | Prayuth Chan Ocha Thailand Court Suspends Pm

முன்னதாக அவர் பதவி விலகக் கோரி தலைநகர் பாங்காக்கில் உள்ள நாடாளுமன்ற கட்டிடங்களுக்கு வெளியே போராட்டக்காரர்கள் திரண்டு போராட்டங்களையும் மேற்கொண்டுள்ளனர்.

பிரயுத் சான்-ஓச்சாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் அவர் தப்பிப்பிழைத்த போதிலும், கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு எதிராக பல எதிர்ப்பு போராட்டங்கள்  முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

நீதிமன்ற உத்தரவு

prayuth chan ocha

இந்நிலையில், அவர் தனது பதவிக்கால வரம்பை மீறியதாக எதிர்கட்சிகளால் தாக்கல் செய்யப்படடுள்ள மனுவை பரிசீலிக்க காரணம் இருப்பதாக நீதிமன்றம் ஏகமனதாக ஒப்புக்கொண்டுள்ளது.

அதற்கமைய, நீதிபதிகள் குழாமினர், தமது குழாமின் பெரும்பான்மை (4/5) தீர்மானத்துக்கமைய இன்று முதல் பிரயுத்தை அவரது பணிகளில் இருந்து இடைநீக்கம் செய்வதாக தெரிவித்துள்ளனர்.

பதவி இழக்க நேரிடும் 

prayuth chan ocha

பிரதமர் பிரயுத் அரசியலமைப்பில் உள்ள எட்டு ஆண்டு பதவி வரம்பு விதியை மீறியுள்ளாரா என்பது குறித்த முடிவு எப்போது வெளியிடப்படும் என்று நீதிமன்றம் அறிவிக்கவில்லை.

அவருக்கு எதிராக முடிவுகள் வெளியானால், அவர் உடனடியாக தனது பதவியை இழக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அந்நாட்டு சட்டத்துக்கமைய, முன்னாள் இராணுவத் தளபதியும், நீண்டகால அரசியல் தலைவருமான, துணைப் பிரதமர் பிரவித் வோங்சுவான் (77), இடைக்கால பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US