ரணிலுக்கு பெருகும் ஆதரவு: மகிந்தவை விமர்சித்த மொட்டு கட்சியின் முக்கியஸ்தர்
ஜனாதிபதி ரணிலை (Ranil Wickramasinghe) ஆதரிப்பது தொடர்பான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் முடிவை வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) விமர்சித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலை ஆதரிப்பதில்லை எனவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஒரு வேட்பாளரை களமிறக்கவுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச தீர்மானித்திருந்தார்.
குறித்த தீர்மானத்துக்கு மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் பலர் எதிர்ப்பினை தெரிவித்து வரும் நிலையில், பலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் ரணிலுக்கு ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
மகிந்தவின் சிறந்த முடிவு
இவ்வாறு மொட்டுக் கட்சி பிளவுபட்டுள்ள நிலையில், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மகிந்தவுக்கு கடிதமொன்றை அனுப்பி தனது விமர்சனத்தை வெளியிட்டுள்ளதுடன் ரணிலுக்கான தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் மகிந்தவின் ஆதரவுடன் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க, பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்தார்.
எனவே, அன்று ரணிலை ஜனாதிபதியாக்குவது என மகிந்த எடுத்த முடிவு சிறந்த தீர்மானம் எனவும் அதனால் நாம் அவரின் பக்கம் நின்றதாகவும் ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தான் பிரதிநிதித்துவப்படுத்தும் கம்பஹா மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து மக்களும் ரணில் மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும் என்பதை விரும்புவதாக குறிப்பிட்டுள்ள அவர், ரணிலுக்கான தனது ஆதரவையும் குறித்த கடிதத்திலேயே வெளிப்படுத்தியுள்ளார்.
YOU MAY LIKE THIS
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri