மகிந்த ராஜபக்சவை கொலை செய்தல்!எக்னலிகொட வழக்கு விசாரணையில் வெளிவந்த பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள்....

CID - Sri Lanka Police Sri Lanka Army Mahinda Rajapaksa Prageeth Eknaligoda
By Kanthan Oct 17, 2026 01:03 AM GMT
Report

 கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து மகிந்த ராஜபக்ச மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களை கொலை செய்ய திட்டம் தீட்டினார் என கடந்த நாட்களில் சமூக ஊடகங்களில் உரையாடல் ஒலிப்பதிவு ஒன்று பரப்பப்பட்டது.

எக்னலிகொட வழக்கில் சாட்சியமளித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி சுரேஷ் குமார் சுரேஷ் என்ற முரளி குறிப்பிட்டதாகவே சொல்லப்பட்டது.

அத்தோடு ஞானசார தேரர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விடயம் ராஜபக்ச அல்லது மொட்டு கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் சரியென பேச்சப்பட்டது. ஆனால் நேற்று நடந்த வழக்கில் குறித்த ஒலிப்பதிவு தொடர்பில் சாட்டயாளரினால் கூறப்பட்ட விடயங்கள்.

ஷிரந்தி இதுவரை குற்றவாளி அல்ல! நீதவானின் அறிவிப்பை அடுத்து மகிந்த தரப்பு அளித்துள்ள உறுதி

ஷிரந்தி இதுவரை குற்றவாளி அல்ல! நீதவானின் அறிவிப்பை அடுத்து மகிந்த தரப்பு அளித்துள்ள உறுதி

முரளி தெரிவித்த பரபரப்பான சாட்சியங்கள்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு, கொழும்பு நிரந்தர சிறப்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தலைமை நீதிபதி நயனாசேன விக்கிரமரத்ன, நலின் ஹேவாவசம் மற்றும் லக்மாலி ஹேவாவசம் ஆகிய நீதிபதிகள் அடங்கிய குழாம் முன்னிலையில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது.

இதற்கிடையில், கடந்த முறை நீதிமன்றம் கூடியபோது, ஏற்கனவே சாட்சியமளித்த சுமதிபால சுரேஷ் குமார் என்ற முரளிதரன் என்பவரிடம் சாட்சியம் பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படி, பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி அசித் சிறிவர்தன சாட்சியாளரிடம் குறுக்கு விசாரணை செய்யத் தொடங்கினார்.

சட்டத்தரணி: "நீங்கள் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவுடன் சகோதரரைப் போல நட்பாக இருந்தீர்கள் அல்லவா?"

சாட்சி: "ஆம்."

சட்டத்தரணி: "அந்தக் காலத்தில் அந்த நட்பு குறித்து தமிழீழ விடுதலை புலி பயங்கரவாத அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் கூறினீர்களா?"

சாட்சி: "இல்லை, நான் அதைப் பற்றி கூறவில்லை."

சட்டத்தரணி: "எக்னலிகொடவுடனான உங்கள் நட்பு குறித்து தமிழ்ச் செல்வனிடம் கூறினீர்களா?"

சாட்சி: "ஆம்."

மகிந்த ராஜபக்சவை கொலை செய்தல்!எக்னலிகொட வழக்கு விசாரணையில் வெளிவந்த பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள்.... | Prageeth Eknaligoda Mahinda Rajapaksa

சட்டத்தரணி: "அந்த நட்பு குறித்து தமிழீழ விடுதலை புலிகள் புலனாய்வுப் பிரிவின் இரண்டாம் நிலையில் இருந்த ஞானவேலிடம் கூறினீர்களா?"

சாட்சி: "ஆம்."

சட்டத்தரணி: "எக்னலிகொடவுடனான தொடர்பைப் பற்றி பொட்டு அம்மானிடம் கூறினீர்களா?"

சாட்சி: "ஆம்." சட்டத்தரணி: "பொட்டு அம்மானிடம் எக்னலிகொடவுடனான நட்பு குறித்துக் கூறியது, ஏவுகணை வீசி நாட்டின் தலைவரை அழிக்க வேண்டும் என்று எக்னலிகொட கூறியதற்குப் பிறகா அல்லது அதற்கு முன்பா?"

சாட்சி: "நான் அதைச் சொன்னது அதற்கு முன்பு."

சட்டத்தரணி: "ஏவுகணை வீசி நாட்டின் தலைவரை அழிக்க வேண்டும் என்று ஹபரணையில் பேசும்போது,நாட்டின் தலைவராக இருந்தது மஹிந்த ராஜபக்ச அல்லவா?"

சாட்சி: "ஆம்." சட்த்தரணி: "அதாவது, இந்த நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்த தலைவர் அல்லவா?"

சாட்சி: "ஆம்."

சட்டத்தரணி: "நீங்கள் எக்னலிகொடவிடம் கடைசியாகப் பேசிய நாளில் மூன்று முறை பேசினீர்கள் அல்லவா? காலையில், மாலையில் மற்றும் இரவில்?" சாட்சி: "

ஆம், கடைசி நாளில் நான் பேசினேன்."

சட்டத்தரணி: "எக்னலிகொடவைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை என்பதை, முகாமில் இருந்தபோது பொருட்கள் சுற்றப்பட்டிருந்த ஒரு பத்திரிகையில் இருந்த புகைப்படத்தைப் பார்த்தே தெரிந்துகொண்டீர்கள் அல்லவா?"

சாட்சி: "ஆம்."

குறுக்கு விசாரணைகள்

இதற்கிடையில், பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி அசித் சிறிவர்தன சாட்சியாளரிடம் நீண்ட குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டு, தமது ஆட்சேபனைகளை நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்தினார்.

அதன்பின்னர், சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா சாட்சியாளரிடம் குறுக்கு விசாரணையைத் தொடங்கினார்.

இதன்போது, பிரகீத் எக்னலிகொட உங்களிடம் என்ன கூறினார் என்பதைத் தெளிவாகக் கூற முடியுமா என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வினவினார்.

மகிந்த ராஜபக்சவை கொலை செய்தல்!எக்னலிகொட வழக்கு விசாரணையில் வெளிவந்த பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள்.... | Prageeth Eknaligoda Mahinda Rajapaksa

அதற்குப் பதிலளித்த சாட்சியாளர் பின்வருமாறு கூறினார்: "நானும் நாதன் சாரும் எக்னலிகொடவும் ஒன்றாகப் பேசிக்கொண்டிருந்தோம்.

அப்போது, போர் முடிந்தாலும் அனைத்துப் பிரச்சினைகளும் முடிவுக்கு வராது என்று கூறினார். அதற்கு, இன்று நினைத்தாலும் அதை மாற்ற முடியும் என்று அவர் சொன்னார்.

அது எப்படி என்று நாங்கள் கேட்டோம். அப்போது அவர், ஜனாதிபதி, அமைச்சர்கள் அனைவரும் ஒரே விமானத்தில் செல்லும்போது ஏவுகணை வீசினால் எல்லாம் முடிந்துவிடும் என்று கூறினார்."

பின்னர் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா, அதை நீங்கள் எந்த அர்த்தத்தில் புரிந்துகொண்டீர்கள் என சாட்சியாளரிடம் மீண்டும் வினவினார். "அவர் ஒரு உதாரணம் சொல்வது போலத்தான் பேசினார், அது அவருடைய பேசும் முறை" என்று சாட்சி பதிலளித்தார். 

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவாராம்! பத்தரமுல்ல சீலரத்தன தேரர் நம்பிக்கை

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவாராம்! பத்தரமுல்ல சீலரத்தன தேரர் நம்பிக்கை

விகாரமகா தேவி பூங்காவில் தஞ்சமடைந்த தேரர்களின் கூடாரங்கள் : நள்ளிரவில் திடீரென வந்த பொலிஸாரால் அகற்றம்

விகாரமகா தேவி பூங்காவில் தஞ்சமடைந்த தேரர்களின் கூடாரங்கள் : நள்ளிரவில் திடீரென வந்த பொலிஸாரால் அகற்றம்

3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US