கிளிநொச்சியில் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் இருவருக்கு விளக்கமறியல்
புதிய இணைப்பு
கிளிநொச்சி (Kilinochchi) - உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் அனுமதியற்ற கட்டிடம் ஒன்றிற்கு
கட்டிட அனுமதிக்காக இலஞ்சம் பெற்ற இரு அதிகாரிகளையும்
எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட
நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கிளிநொச்சி (Kilinochchi) - கரைச்சி பிரதேச சபை வருமான உதவியாளர்கள் இருவர் நேற்று (03.09.2024) கைது செய்யப்பட்டனர்.
இதன்போது, இலஞ்சம் வழங்கியதாக குறிப்பிடப்படும் அறுபதாயிம் ரூபா பணம் சான்றுப்பொருளாக மன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து, இருவரையும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரிகள், சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டிடம் ஒன்றுக்காக மூன்று இலட்சத்து அறுபதாயிரம் ரூபா இலஞ்சம் கோரிய நிலையில் முதற்கட்டமாக 60,000 ரூபா பணம் நேற்று அந்த கட்டிட உரிமையாளரால் வழங்கப்பட்ட போதே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
செய்தி - யது
முதலாம் இணைப்பு
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கிளிநொச்சி (Kilinochchi) - கரைச்சி பிரதேச சபை வருமான உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையானது, நேற்று (03.09.2024) உருத்திரபுரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
குறித்த வருமான வரி உத்தியோகத்தர்கள் இருவரும் இலஞ்சம் வாங்குவதாக ஆணைக்குழுவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமையவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |