மியன்மார் மற்றும் தாய்லாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! தரைமட்டமான கட்டிடங்கள்
புதிய இணைப்பு
இன்று நண்பகல் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் தற்போது வரை எவ்வித உயிரிழப்புக்கள் மற்றும் சேதங்கள் தொடர்பில் எவ்வித உறுதியான தகவல்களும் வெளியிடப்படவில்லை.
தாய்லாந்தின், பாங்கொக் நகரிலும் இன்று (28) 7.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாய்லாந்திலும் உயரமான பல கட்டிடங்களில் இருந்து மக்கள் அச்சத்தில் வெளியே ஓடி வரும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
முதலாம் இணைப்பு
மியான்மரில் இன்று (28) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நிலநடுக்கமானது இன்று நண்பகல் 12.50 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 7.7ஆக பதிவாகி உள்ளளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு மற்றும் மத்திய தாய்லாந்தின் தொலைதூரப் பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
கட்டடங்களில் விரிசல்
இந்த நிலநடுக்கத்தால் பல கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Big earthquake in Bangkok. Whole building was shaking for 3 min or so pic.twitter.com/ztizXSoGl1
— On The Rug (@On_the_Rug) March 28, 2025
மியன்மார் தலைநகரிலிருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சகாய்ங்க் நகரில் சுமார் 16 மற்றும் 18 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு இந்நிலநடுக்கம் பரவியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Breaking: Video shows the moment a skyscraper under construction collapsed due to earthquake in Bangkok. pic.twitter.com/OIdxc4epKf
— PM Breaking News (@PMBreakingNews) March 28, 2025
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
