எரிபொருள் தட்டுப்பாட்டின் எதிரொலி! மின்வெட்டு ஏற்படும் நாளை அறிவித்தார் அமைச்சர்
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மின்வெட்டு நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியங்கள் உண்டு என இலங்கை மின்சாரசபையின் பதில் பொதுமேலதிகாரி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் அது குறித்து முன்கூட்டியே மக்களுக்கு அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதியளவு எரிபொருள் இன்மையினால் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது. களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தில் ஐந்தரை நாட்களுக்கு போதுமானளவு எரிபொருளே காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் எரிபொருட்கள் நேற்று பகலுடன் தீர்ந்து போனது என அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினத்தைப் போன்றே இன்றைய தினத்திலும் மின்வெட்டு இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை எரிபொருள் கிடைக்கப் பெற்றால் செவ்வாய்க்கிழமை மின்வெட்டு ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு