பல பகுதிகளில் வழமைக்குத் திரும்பிய மின் விநியோகம்
நாடு முழுவதும் 80% க்கும் அதிகமான மின்சார விநியோகம் இப்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட சில முக்கிய இடங்களுக்கான மின் விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சார சபை முன்னர் அறிவித்திருந்தது.
மேலும், கொழும்பு - 13 உள்ளிட்ட மேலும் பல பகுதிகளில் மின்சார விநியோகம் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது.
நாடளாவிய ரீதியில் இன்று காலை 11:15 மணி முதல் ஏற்பட்ட மின் தடை காரணமாக நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகினர்.
இந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலை, அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையம், பியகம, சபுகஸ்கந்த உள்ளிட்ட பல முக்கியமான இடங்களில் மின் விநியோகம் மீண்டும் வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகேஷ் பாபுவின் வாரணாசி பட நிகழ்ச்சியில் பாட ஸ்ருதிஹாசன் வாங்கிய சம்பளம்... இத்தனை கோடியா? Cineulagam
பிரித்தானிய கடற்பரப்பிற்குள் நுழைந்த ரஷ்ய உளவு கப்பல்: நிலைநிறுத்தப்படும் பிரிட்டிஷ் படைகள் News Lankasri