7 தொடக்கம் 8 மணிநேர மின்வெட்டு மற்றும் கட்டண அதிகரிப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்
7 தொடக்கம் 8 மணிநேர மின்வெட்டு ஏற்படும் என்ற அச்சத்தை பரப்பி கட்டணத்தை அதிகரிக்க விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தயாராகி வருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின் கட்டணத்தை அதிகரிப்பதற்காக இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள கணக்கீடுகள் சரியானவையல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்சார கட்டண அதிகரிப்பு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய சந்தர்ப்பத்தில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்கப் போவதில்லை. 12 முறைமைகளின் அடிப்படையில் மின்சாரக் கட்டணம் தொடர்பில் இலங்கை மின்சார சபை கணக்கிட்டுள்ளது.
12 பில்லியன் ரூபா செலவில் நீர் மின்னுற்பத்தியின் ஊடாக 4 ஆயிரத்து 600 கிகாவோட் மின்சாரத்தை தயாரிக்க முடியும் என மின்சார சபையினர் குறிப்பிட்டுள்ளனர். அதேயளவு மின்சாரத்தை எரிபொருளின் ஊடாக தயாரிப்பதற்கு 450 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகையை கோருகின்றனர்.
தற்போதைய தரவுகளுக்கு அமைய நீர் மின்னுற்பத்தியின் ஊடாக 5 ஆயிரம் கிகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ள போதிலும் அடுத்த ஆண்டு 4 ஆயிரம் கிகாவோட் உற்பத்தி செய்ய முடியும் என அறிவித்துள்ளனர். இந்தநிலையில் அடுத்த ஆண்டு 50 சதவீதமான மின்சாரத்தை எரிபொருளின் ஊடாக உற்பத்தி செய்வதற்கு இலங்கை மின்சார சபை எதிர்பார்க்கிறது.
மின்வெட்டு
எனவே மின்சாரசபையின் கணக்கீடுகள் தவறானவை. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நலமுடன் இருக்கும் வரை மூன்றாம் தரப்பினருக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்த இடமளிக்கப்பட மாட்டாது.
7 தொடக்கம் 8 மணிநேரம் மின்வெட்டு ஏற்படும் என்ற அச்சத்தை பரப்பி கட்டணத்தை அதிகரிக்க விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தயாராகி வருகிறார். எனினும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அவ்வாறான விடயத்திற்கு ஒருபோதும் அடிபணியாது என குறிப்பிட்டுள்ளார்

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
