நாடு முழுவதும் சுழற்சி முறையில் மின்வெட்டு! புதிய அறிவிப்பு வெளியானது
நாட்டில் போதிய மின்சார உற்பத்தி இல்லாததால் மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய மின்வெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் காலை 8.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை ஒரு மணி நேரம் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
தென் மாகாணத்தில் மாத்திரம் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை 3 மணி நேரம் மின்வெட்டு அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
நாளைய தினம் தென் மாகாணத்தில் ஒன்றரை மணிநேர மின் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
எனினும், நாளைய தினம் நாடு பூராகவும் இந்த மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என்றும் தேவையான எரிபொருள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தாா்.
நீர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே தென் மாகாணத்தில் மின்வெட்டை நடைமுறைப்படுத்துவதற்கான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாளை தென் மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மின்வெட்டு தொடர்பான நேரம் நாளை பிற்பகல் 12 மணிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்றும் அவ்வாறு ஏனைய பகுதிகளில் நாளை மின்வெட்டு மேற்கொள்ளப்பட வேண்டி தேவை ஏற்பட்டால் பிற்பகல் 12 மணிக்கு முன்னா் அறிவிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினாா்.
தற்போது கொழும்பில் இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டாா்.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
