இலங்கையில் மின் தடையினால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாரிய தாக்கம்
நாட்டின் மின்சார அமைப்பின் நிலையற்ற தன்மை பொருளாதாரம் மற்றும் சமூகம் இரண்டிலும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அதுக்கோரல தெரிவித்துள்ளார்.
ஒரு மணி நேர மின்வெட்டு காரணமாக மின்சார சபை மட்டும் சுமார் 69 மில்லியன் ரூபாய் வருவாயை இழப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில தினங்களாக நாடு முழுவதும் மின்சார தடை ஏற்படுகின்றது. இதனால் மின்சார சபைக்கு நட்டம் ஏற்படும்.
மின்வெட்டினால் பாதிப்பு
இது நாட்டிற்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் பாரிய தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளின் செயல்பாட்டில் மின்வெட்டு ஏற்படுத்தக்கூடிய தாக்கமும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வங்கிகள், தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து துறைகளுக்கும் தடையற்ற மின்சாரம் கட்டாயமாகும். எனினும் இவை அனைத்தும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன.
இதனால் பில்லியன் கணக்கான ரூபா நட்டம் நாட்டிற்கு ஏற்படும் மதிப்பிடப்பட்டுள்ளதென பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.