கடும் சரிவை சந்தித்தது பிரித்தானிய பவுண்ட் - இங்கிலாந்து வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தேவைப்படும் அளவுக்கு வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படலாம் என்று இங்கிலாந்து வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அமெரிக்க டொலருக்கு நிகராக பிரித்தானிய பவுண்ட் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில் இங்கிலாந்து வங்கி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பிரித்தானிய பவுண்டின் வீழ்ச்சியானது அமெரிக்க டொலரை ஒரு புதிய இரண்டு தசாப்த கால உச்சத்தை அடைய உதவியது. இதன்படி, பவுண்ட் அதன் பெறுமதியில் 4.9 வீதம் சரிந்ததுடன், டொலரின் பெறுமதி 1.03 ஆக அதிகரித்துள்ளது.
புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டங்கள் குறித்து வர்த்தக சந்தைகள் பெரும் அச்சமடைந்துள்ள நிலையில், பவுண்ட்டின் பெறுமதி சரிவை சந்தித்துள்ளது.
இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் 45 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள சர்ச்சைக்குரிய வரிக் குறைப்புகளை நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், சந்தைகள் மூடப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் வட்டி விகிதங்களை அதிகரிக்கத் தயாராக இருப்பதாக இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி தெரிவித்துள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 44 நிமிடங்கள் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
