உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கம் இல்லை: தினேஷ் குணவர்த்தன
"உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை ஒத்திவைக்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை" என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பாக நேற்று(27) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட போதே இதனை தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நடவடிக்கைகள்
“கடந்த வருட வாக்காளர் பட்டியலின் படி உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த வருட வாக்காளர் பதிவுகளை விரைவாக மேற்கொள்ளவும், ஜூன் 15 தொடக்கம் ஜூலை 12ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் அவற்றின் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை சகல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam
டிசம்பர் மாத சிறப்பு பலன்கள்: நான்காம் இடத்தில் உச்சம் பெறும் குரு! மேஷத்துக்கு ஜாக்பாட் உறுதி Manithan