வவுனியாவில் தபால் ஊழியர்களால் அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுப்பு
தபால் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த அடையாள வேலை நிறுத்தம் நேற்றுமுன் தினம் (11.12.2022) மற்றும் நேற்றய தினங்களில் (12.12.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அஞ்சல் பரிவரத்தனை நிலையம் , தபால் காரியாலயங்கள் மற்றும் நிர்வாக காரியாலயங்களில் எந்த விதமான கண்காணிப்புமின்றி மேலதிக கொடுப்பனவுக் குறைப்பு, தபால் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களின் இடமாற்ற சபையின் மேல்முறையிட்டு சபையில் நடவடிக்கையிலிருந்து தொழிற்சங்கத்தினை நீக்கியமைக்கு அமையவே இந்த அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பணிப்புறக்கணிப்பு
தபால் கட்டணம் மறு சீரமைப்பு தொடர்பில் பல்வேறுபட்ட விமர்சனங்களுக்கு ஆளாகி தபால் திணைக்களத்தின் வியாபார நடவடிக்கைகள் வீழ்ச்சியடைவதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமை, போன்ற பல விடயங்களுக்கு எவ்வித தீர்வும் எட்டப்படாமைக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாக இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள்
அதற்கு ஆதரவு வழங்கும் வகையில் வவுனியா பிரதான தபால் நிலையம் முடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடிதங்கள் , பொதிகள் அனுப்ப வந்த மக்கள் மற்றும் முதியோர்
கொடுப்பனவு பெறுவதற்கு வருகை தந்த முதியவர்கள் என பலரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.